வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ் மாவட்டத்தின் மல்லாகம் பகுதியில் இடம்பெற்றது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 67 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறுகிறது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராம மக்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்இ இளைஞர்கள்இவிவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.