More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்!
Oct 06
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்!

மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



காற்று நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



கடல் நிலை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் கொந்தளிப்பு முதல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.



புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



எனவே ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில

Jan01

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீண்டும் இந்தியாவுக்கு வ

Jan19

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங

Jan27

நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையி

Jan13


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல

Sep24

கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா

Mar07

20 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கல்வித்தகைமைய

Jun20

சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளின் அடி

Sep23

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு

Apr30

இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந

Mar27


நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ

Feb08

தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா

Mar28

ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான

Oct18

2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர

Sep30

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ