More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை துரிதம்!
கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை துரிதம்!
Oct 06
கடலில் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை துரிதம்!

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.



கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26 ம் திகதி அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் மேற்குறித்த விடயத்தை சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.



மேற்குறித்த மீனவர்கள் காணாமல் சென்ற விடயத்தை சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர் கொண்டு வந்திருந்த போதிலும் தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போன படகு உரிமையாளரினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.



எனவே கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு தற்காலிகமாவது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு ஏதாவது கொடுப்பனவையோ அல்லது நஷ்டஈட்டையோ பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் இதுவரை முன்வரவில்லை. எனினும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.



குறித்த விடயத்தை மனிதாபிமான நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டு குறித்த மீனவ குடும்பங்களிற்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டு கnhள் முன்வைக்கப்பட்டுள்ளது.



அம்பாறை மாவட்டத்தின் கல்முனை துறையில் இருந்து ஆழ்கடல் இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் 10 நாட்களாகியும் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதுடன் கடந்த திங்கட்கிழமை (26) குறித்த படகில் சென்ற நிலையில் எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் உள்ளனர்.



இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தனியான தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட

Feb04

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாண

Mar18

கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா

Sep03

யாழ்ப்பாணம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குவில் ப

Mar13

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப

Oct15

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் க

Jun10

யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்து

Mar14

 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Sep27

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்

Mar08

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு

Oct04

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வ

Jun28

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி ந

Feb26

துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி