More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!
Oct 04
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து ஜஸ்பிரிட் பும்ரா விலகல்!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.



முன்னதாக பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 6 மாதங்களுக்கு அவரால் களம் காண முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டது.



ஆனால் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து மருத்துவக் குழு மற்றும் நிபுணர்களுடன் நடைபெற்ற விரிவான மதிப்பீடு மற்றும் ஆலோசனைக்கு பின்னர் அவருக்கு ஓய்வளிக்கபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கூறியுள்ளது.



இதற்கு அறுவைச் சிகிச்சை ஏதும் தேவை இல்லை எனவும் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் பட்சத்தில் அந்தக் காயம் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பும்ரா விலகியது இந்திய அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதில் அணியில் இடம் பெற உள்ள வேகப்பந்து வீச்சாளர் பெயரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



மேலதிக வீரர்களாக உள்ள தீபக் சஹார், முகமது ஷமி மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோரில் ஒருவர் பிரதான அணியில் இணைத்துக் கொள்ளப்படுவர்.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம

Feb08

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம

Feb12

இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர

Jun07

இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்

Sep23

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை  இடம்

Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

Mar08

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ

May10

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்

Jul26

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ

Mar27

2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி

Mar07

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா

Apr15

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ

May06

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி