More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் -குற்றச்சாட்டு!
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் -குற்றச்சாட்டு!
Oct 04
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் -குற்றச்சாட்டு!

பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.



அமைதியின்மை குறித்த தனது முதல் பொதுக் கருத்துக்களில் அயதுல்லா அலி கமேனி ஈரானின் பரம எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளால் கலவரங்கள் தூண்டப்பட்டதாக கூறினார்.



ஒரு தசாப்த காலமாக தனது ஆட்சிக்கு எதிர்ப்புகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன மேலும் பாதுகாப்புப் படைகள் மேலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



அமைதியான போராட்டக்காரர்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறை தீவிரமடைகிறது என்ற அறிக்கைகள் குறித்து தான் கடுமையான கவலை அடைவதாக ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி வட மேற்கிலுள்ள சாகேஸ் நகரை சேர்ந்த 22 வயதான குர்து இன பெண்ணான மாசா அமினி தெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமுலாக்கும் பொலிஸ்துறையால் கைதுசெய்யப்பட்டார்.



பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அமினியின் தலையில் பொலிஸ்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும் பொலிஸ்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.



தாக்குதலுக்கு பிறகு 3 நாட்கள் கோமா நிலையில் துன்பப்பட்டு, மாசா அமினி, மருத்துவமனையில் உயிரிழந்தார்.



இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் பொலிஸ்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.



பொலிஸ்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர். அங்கு 150க்கும் அதிகமான இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் போது இதுவரை 92க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May09

ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ

Jan18

ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித

May20

ஐரோப்பிய நாடான நார்வேவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக

Feb14

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில

Jun23

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அர்வாடா நகரில் உள்ள ஒரு

May21

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடை

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம

Jun12

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச

Mar14

மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

Mar03

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா

Jan06

சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல்

Jul16

உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள

May13

அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ

Mar20

துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி