More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரேஸில் ஜனாதிபதி தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு நுழைகிறது!
பிரேஸில் ஜனாதிபதி தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு நுழைகிறது!
Oct 03
பிரேஸில் ஜனாதிபதி தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு நுழைகிறது!

பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில், பெரும்பான்மை இல்லாததால், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இரண்டாவது சுற்றுக்குள் நுழைகின்றது.



இதில் இடதுசாரி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, தீவிர வலதுசாரி தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவை எதிர்கொள்கிறார்.



ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், போல்சனாரோவின் 43 சதவீதத்துக்கு எதிராக லூலா 48 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எனினும் இது கருத்துக் கணிப்புகள் பரிந்துரைத்ததை விட மிக நெருக்கமான முடிவு.



ஆனால் 50 சதவீதத்துக்கும் அதிகமான செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறும் வாக்கில் லூலா தோல்வியடைந்தார்.



இருவரில் யார் பிரேஸிலை வழிநடத்த வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வாக்காளர்களுக்கு இப்போது நான்கு வாரங்கள் உள்ளன.



முதல் சுற்றில் முழுவதுமாக வெற்றி பெறுவது எப்போதுமே எந்தவொரு வேட்பாளருக்கும் ஒரு கடினமான வாய்ப்பாகவே இருக்கும். இது கடைசியாக 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.



ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்ததால் 2018ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாத லூலாவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசத்தை அளிக்கிறது.



ஜனாதிபதி போல்சனாரோ, அவரது கருத்துக் கணிப்புகள் லூலாவை விட மிகவும் பின்தங்கியிருப்பதாகக் காட்டுகின்றன.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun24

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு ந

May23

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதி

Jun07

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவ

Mar10

உலகம் முழுவதும் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தினம்

Aug26

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்

Feb28

உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

Sep21

450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம்

Mar10

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரப்பு போர் தொடர்ந்துவரு

Sep01

மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’ படத்தின் மூலம் நடிகராக

Oct20

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர

Oct30

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்

Sep12