More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மாணவியொருவருக்கு நேர்ந்த கதி
மாணவியொருவருக்கு நேர்ந்த கதி
Oct 03
மாணவியொருவருக்கு நேர்ந்த கதி

யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலைப் பதிவு செய்து அதை வைத்து மிரட்டி அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மாணவியுடன் இளைஞர் ஒருவர் வீடியோ அழைப்பின் மூலம்  சில மாதங்களுக்கு முன்னர் உரையாடியுள்ளார்.



இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.

மாணவியுடனான உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.



அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

அதேவேளை இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.



மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.



இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும் அதனைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய

Dec30

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்

Jan27

போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Jan09

குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த

May11

  இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய

Jul16

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந

Oct17

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை

Apr03

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்

Jan28

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத

Jun02