More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வாள் வெட்டு சந்தேக நபர் யாழில் கைது!
வாள் வெட்டு சந்தேக நபர் யாழில் கைது!
Oct 02
வாள் வெட்டு சந்தேக நபர் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் முதன்மை சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.



மானிப்பாயில் அண்மையில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் தேடப்பட்டு வந்தார்.



அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும் வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யபட்டனர்.



அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.



சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டு ள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.



இந்தக் கைது நவடிக்கையை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun22

கொழும்பு உட்பட 2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள்

Aug17

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா

May11

  இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய

May25

ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதா

Sep12

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட

Jun07

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது ச

May29

அரசினால் நாடுபூராகவும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட

Mar16

தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்

Aug27

இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்க

May18

எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்

Jul09

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க

Mar16

எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்

Oct14

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே

Oct15

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

Aug29

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட