More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் யார்?
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் யார்?
Oct 02
சோனியா காந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் யார்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் போட்டியிடுவது மட்டும் உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தீக்சாபூமி நினைவு சின்னத்தை இன்று பார்வையிட்ட சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது இந்த தேர்தலில் சோனியாகாந்தி குடும்பத்தினருக்கு பிடித்த வேட்பாளர் மல்லிகார்ஜூன் கார்க்கேவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சசிதரூர் தெரிவித்துள்ளதாவது:



காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் (சோனியா, ராகுல், பிரியங்கா) சந்தித்துப் பேசினேன். கட்சித் தலைவர் தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யாரும் இல்லை என்றும், அப்படிப்பட்ட வேட்பாளர் யாரும் இருக்க மாட்டார் என்றும் அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அவர்கள் நல்ல நேர்மையான தேர்தலை நடத்த விரும்புகிறார்கள். காந்தி குடும்பம் நடுநிலையாகவும், கட்சி பாரபட்சமற்றதாகவும் இருக்கும். சிறந்த முறையில் இந்த தேர்தலை நடத்தி கட்சியை பலப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். கட்சித் தலைவர் (சோனியாகாந்தி) என்னிடம் உறுதியளித்துள்ளதால் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும

Mar16

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி

Sep25

தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Aug16

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய

May31

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Jun18