More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயம் வெளியீடு!
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயம் வெளியீடு!
Oct 01
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயம் வெளியீடு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல் நாணயத்தைஇ ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.



சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் நேற்று வெளியிடப்பட்டது.



இந்த நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் வருவதால்இ மக்கள் டிசம்பர் மாதத்திலிருந்து சிறிய மாற்றங்களில் சார்லஸ் மன்னரின் உருவத்தை காணத்தொடங்குவர்.



இதற்கிடையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஒக்டோபர் 3ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒரு நினைவு நாணயத்தை ரோயல் மின்ட் நிறுவனம் வெளியிடும்.



இதுதவிர மன்னரின் உருவம் கொண்டுள்ள சிறப்பு 5 பவுண்ட் நாணயமும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



50 பென்ஸ் நாணயத்தில் மன்னர் சார்லஸ் முகம் இடது புறம் பார்த்தபடி உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த அவரது தாயார் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலது புறம் பார்த்தப்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட சுமார் 27 பில்லியன் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாவும் அவை தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீ

May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும

Sep20

அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்

Jul22

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க

May19

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள

Apr18

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் ப

Jun29

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான

Feb06

வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா

Mar18

வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி

Jun10