More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யாவுடன் உத்தியோகபூர்வமாக இணைப்பு: புடின் அறிவிப்பு!
ரஷ்யாவுடன் உத்தியோகபூர்வமாக இணைப்பு: புடின் அறிவிப்பு!
Oct 01
ரஷ்யாவுடன் உத்தியோகபூர்வமாக இணைப்பு: புடின் அறிவிப்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார்.



ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா ஆகிய பிராந்தியங்களை இணைக்கும் விழா நேற்று புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெற்றது.



இதன்போது  நிர்வாகத் தலைவர்களுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட புடின்  இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.



இந்த நிகழ்ச்சியின் போது உரையாற்றிய புடின் 'அந்தந்த பகுதி மக்களே ரஷ்யாவோடு தங்களை இணைத்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலத்தை பெற்றுகொள்ள பல தலைமுறைகளாக ரஷ்யர்கள் போராடியுள்ளனர்.



டோன்பாஸ் பிராந்தியத்திலுள்ளவர்கள் ரஷ்யாவின் குடிமக்களாக என்றென்றும் இருப்பர் என்று உக்ரைன் மற்றும் மேற்குலக நாடுகளில் உள்ள அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புகின்றேன். மக்களின் இந்த தெரிவை உக்ரைன் அதிகாரிகள் மிகுந்த மரியாதையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.



தங்கள் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கும் வகையில் இயன்ற எல்லாவற்றையும் பயன்படுத்தி நிலத்தை ரஷ்யா பாதுகாக்கும். இந்த நகரங்கள் மற்றும் கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளையும்இ சுகாதார பராமரிப்பு மற்றும் கல்வி மேம்பாட்டையும் ரஷ்யா மீண்டும் கட்டியெழுப்பும்' என கூறினார்.



மேலும் இந்த மோதல்களில் உயிர்நீத்த வீரமிக்க சிப்பாய்களை நினைவுகூரும் விதமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்த அனைவரையும் புடின் கேட்டுக்கொண்டார்.



உக்ரைனின் இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவோடு இப்போது இணைக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிகளை மீட்க உக்ரைன் மேற்கொள்ளும் முயற்சிகள், ரஷ்ய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நேரடி தாக்குதலாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep10

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது

Sep24

80 கிமீ நீள ராணுவ வாகன அணிவகுப்பு பெய்ஜிங்கை நோக்கிச் ச

Apr20

உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை

Oct24

இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால

Jan27

 

இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்

Mar27

 உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படு

Apr18

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட

Sep28

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ

Mar06

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி

May19

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள

Sep14

மியான்மரில் கடந்த பிப்ரவரியில் அந்நாட்டின் தலைவர் 

Jul26

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால

Feb18

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் க

Sep13

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

Sep17

 சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம், 3 பேரின் உயி