More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்.பொது நூலக சிற்றுண்டி சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல்!
யாழ்.பொது நூலக சிற்றுண்டி சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல்!
Sep 30
யாழ்.பொது நூலக சிற்றுண்டி சாலைக்கு நீதிமன்ற உத்தரவில் சீல்!

யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.



யாழ்.பொது நூலகத்தில் இயங்கும் சிற்றுண்டி சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.



அதன் அடிப்படையில் கடந்த 09ஆம் திகதி சுகாதார பரிசோதகர் சிற்றுண்டி சாலைக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டதுடன்  அங்கு காணப்பட்ட சில குறைப்பாடுகளை உரிமையாளருக்கு சுட்டிக்காட்டி  அதனை நிவர்த்தி செய்வதற்கு கடந்த 28 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டது.



அந்நிலையில் 28ஆம் திகதி மீள சென்று பரிசோதித்த போது  சுகாதார பரிசோதகரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படாமையால்  நேற்றைய தினம் வியாழக்கிழமை சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு எதிராக யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



வழக்கு விசாரணையின் போது உரிமையாளர் குற்றத்தினை ஏற்றுக்கொண்டமையால் உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்த நீதவான்  சுகாதார பரிசோதகரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் சிற்றுண்டி சாலைக்கு சீல் வைக்குமாறும் கட்டளையிட்டார். அதனை அடுத்து சிற்றுண்டி சாலை சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை

Jan19

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத

Jul19

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூச

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி

Mar13

பேரீச்சம்பழம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக

Mar14

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெறவு

Sep26

இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்

Feb16

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்

Jan19

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு

Aug03

வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி

Feb04

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்

Jul20

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எ

Aug18

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேற

Jul04

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி

Jan12

தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி