More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது!
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது!
Sep 30
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு சமூகப் பாதுகாப்பு சபையின் தேசிய விருது!

சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று  நடைபெற்றது.



இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து மாவட்ட இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.



நிகழ்வில் இளைஞர் சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய முன்னேற்பாடு திட்டமான ஆரஸ்சாவ, சுரக்கும திட்டத்தின் ஆரஸ்சாவ திட்டத்தில் இணைந்து கொண்ட மாணவர்களுக்கான ஓய்வூதியத் தொகையின் பெறுமதியின் அடிப்படையில் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி கௌரவிக்கப்பட்டது.



மேலும் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்கினை 100 வீதம் பூர்த்தி செய்தமைக்காக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களுக்கு தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



அதே போன்று பிரதேச செயலகத்துக்கு வழங்கப்பட்ட இலக்குகளை தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்து கொண்ட பிரதேச செயலகமாக நானாட்டான் பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அப் பிரதேச செயலகத்திற்கான தேசிய விருதும் (2021) வழங்கி கௌரவிக்கப்பட்டது.



அதேபோன்று 2019ஆம் ஆண்டு தேசிய ரீதியில் அடைவு மட்டத்தை அடைந்த பிரதேச செயலகமாக மன்னார் நகர பிரதேச செயலகம் தெரிவு செய்யப்பட்டதுடன் அதற்கான தேசிய விருதும் முன்னாள் பிரதேச செயலாளருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov04

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத

Jan25

நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக

Mar08

 பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்

Jan27

இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூப

Jun12

 மன்னிப்பு கோரினார் மின்சார சபை தலைவர்

மன்னார் க

Mar15

கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும

Oct22

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13

Oct25

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Jul16

நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர

Mar10

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர

May30

நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு

Jan13


 திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி

Sep20

நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த

Jun24

மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண

Feb07

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்