ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தற்போது அந்நாட்டின் கார்கிவ் நகரம் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ரஷ்ய கூடுதலாக 20-க்கும் மேற்பட்ட படைகளை களமிறக்கியுள்ளதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கார்கிவ் நகரம் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அந்நகரில் வெடிமருந்துகள் மற்றும் எரிபொருளுடன் வந்த ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் ஆயுத படைகள் தாக்கி அழித்துள்ளன.உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷ்ய கான்வாய் வெடித்து சிதறும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ட்ரோன் மூலம் உக்ரைன் இந்ந தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
https://twitter.com/i/status/1521690167379169280