பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகராக இருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த பின் சபாநாயகர், நாளை தினத்திற்கான வாக்கெடுப்பு குறித்து அறிவித்துள்ளார்.