உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தில் அதிக உடல் எடை மற்றும் உடற்பருமன் ஆபத்தான போக்கில் அதிகரித்து வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஐரோப்பியக் கண்டத்தில் ஆண்டு தோறும் 1.2 மில்லியன் மரணங்களுக்கு உடற்பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்புக் காரணமாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதெசமயம் அமெரிக்கா தவிர்ந்த உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஐரோப் பாவில் வளர்ந்தோரில் காற் பங்கினர்உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெவ்வேறு வகையான 13 புற்று நோய்களுக்கும் இருதய நோய்கள் பலவற்றுக் கும் காரணமான உடற்பருமன் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் புற்று நோய்களை ஏற்படுத்துகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உடல் எடை உடற் பருமன் கடந்த ஐந்து தசாப்தங்களில் 138 வீதத்தால் உயர்ந் துள்ளது. ஒரு தொற்று நோயின் கணக்கில் அது பெருகிவருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இனிப்புப் பானங்கள், ஆரோக்கியமற்ற உணவுவகைகளை வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் ஒன்-லைன் உணவுச் சந்தைகள், குழந்தைகளிடையே ஒன் லைன் வீடியோ கேம், சோசல் மீடியா போன்றவை உட்பட ஐரோப்பாவின் உச்சபட்சமான டிஜிட்டல் வாழ்க்கை முறைச் சமூகம் போன்ற பலவற்றைக் காரணங்களாகக் காட்டியுள்ள அந்த அறிக்கை, உடற் பருமனைத் தடுப்பதற்கு அவசரமான கொள்கை மாற்றங்கள் அவசியம் என்று தெரிவித்துள்ளது.