உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்கு கொளுந்துவிட்டு எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க்-ன் மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கே ஏவுகணை தாக்குதலுக்கு இரையாகியுள்ளது.
ஏவுகணை தாக்கியதில் கிடங்கில் இருந்து 4 டேங்க் தீப்பற்றி எரிந்ததாகவும், ஒவ்வொரு டேங்குகளிலும் 5000 டன் எரிபொருள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எண்ணெய் கிடங்கு மீது தாக்கிய ஏவுகணையை எந்த தரப்பு ஏவியது என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கு தீப்பற்றி பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்து, வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.