தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் நடிகர் கமல் ஹாசன்.
இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இதற்குமுன் வருகிற மே 15ஆம் தேதி விக்ரம் திரைப்படம் ட்ரைலர் மற்றும் இசை இரண்டும் வெளிவருகிறது.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 177 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசனுக்கு பின் திரையுலகிற்கு வந்த விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்கள் பல நூறு கோடிகளை சொத்து சேர்த்துள்ள நிலையில், கமல் ஹாசன் மட்டும் ரூ. 177 கோடி சொத்து வைத்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.