இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால கடன் வசதியின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை Indian Oil Corporation Limited நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மின்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிறப்பு நிலை கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பேரில் Indian Oil Corporation Limited நிறுவனத்திற்கு தொடர்புடைய ஒப்பந்தத்தை வழங்க முடிவு செய்யப்பட்டது.