More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்
தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்
May 03
தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.



பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் எனவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.



 



இதனடிப்படையில், பிரதமர் பதவி விலகினால், அமைச்சரவையும் கலைந்து விடும். இதன் பின்னர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரத்திற்குள் பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





 



அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களாக 10 பேரை மாத்திரம் நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மற்றும் அமைச்சரவையை விசேட சபையின் மூலம் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இதனிடையே தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான  பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.





 



இந்த பேச்சுவார்த்தை கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் நடைபெற்றது. எது எப்படி இருந்த போதிலும் புதிய பிரதமர் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவராக இருப்பார் என்றே பேசப்படுகிறது.



இதன்படி டளஸ் அழகப்பெரும பெரும்பாலும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும்,  சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணியினரும் டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா

Oct23

'நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்

Mar13

அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்

Feb01

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்

Feb23

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத

Mar05

வெளிநாட்டு இளம் தம்பதிகள் பயணித்த முச்சக்கர வண்டியொன

Oct15

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

May22

இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த

Feb04

குற்றவாளிகளை எவ்வித விசாரணையும் இன்றி விடுதலை செய்யு

Aug17

மன்னார்  முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு

May03

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம

Feb04

ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத  நிலையங்களுக்கு இடையில்

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

Mar09

7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா

Oct07

இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் தரம் குறித்து ஆய்வு ந