More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோட்டாபயவின் ஆலோசகர்கள் எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் - தயாசிறி ஜயசேகர
கோட்டாபயவின் ஆலோசகர்கள் எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் - தயாசிறி ஜயசேகர
May 03
கோட்டாபயவின் ஆலோசகர்கள் எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் - தயாசிறி ஜயசேகர

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.



குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் மேலும் குறிப்பிட்டதாவது,



அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தவறான ஆலோசகர்களை தெரிவு செய்தமையினால் நாடு நெருக்கடி நிலைக்கு சென்றுள்ளது.



அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும், பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீட்கவேண்டும்.



 



சஜித் பிரேமதாச கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவினை வழங்க தயாராக இருந்தாலும் அவர் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதை முதலில் அறிவிக்க வேண்டும்.



நாட்டை எப்படி ஆள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மட்டுமே சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கும்.



இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்யும்வரை தீர்வுகளைப் பற்றி பேச மாட்டோம் என்றும் தேர்தலை நடத்துமாறும் அனுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.



 



ஆனால், நாட்டில் பாடப் புத்தகங்களைக்கூட அச்சடிக்கக் காகிதம் இல்லாத நிலையில் வாக்குசீட்டை அச்சிட காகிதம் எங்கே கிடைக்கும் எனவும் தயாசிறி ஜயசேகர கேள்வியெழுப்பியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct08

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய

Jan28

 

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர

Aug04

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு

Feb02

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த

Sep16

இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவி

Feb20

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில்  இடம்பெற

Sep16

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் ச

Feb02

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற

Mar10

வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ

Oct25

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க

Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

May28

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறை

Sep24

இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப

Feb04

அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையா

Mar03

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த