பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. தாஜ் மஹால் என்ற படத்தின் மூலமாக நடிகராக களமிறங்கி அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருக்கிறார்.
கடைசியாக அவர் சிம்புவின் மாநாடு படத்தில் வில்லன் எஸ்ஜே சூர்யா உடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் அது அதிகம் முக்கியத்தும் இல்லாத ரோல் என்பதால் படத்தில் அவர் காட்சிகள் அதிகம் இல்லை.
தற்போது மனோஜ் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.