சிபி சக்ரவத்தி அறிமுக இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டான்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய், பாலசரவணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயனின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம், வருகிற மே 14ஆம் தேதி உலகம்முழுவதும் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்திகேயன், 17 பையனாக நடித்துள்ளாராம். அப்படி நடிக்க சிவகார்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டதாக படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.