தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவர் தற்போது அவரின் 66-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் அவருடன் சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட நடிகர் சரத்குமார் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.
அதன்படி அவர் இப்படம் ஸ்கிரிப்ட் மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது, அனைத்து வகையான ரசிகர்கள் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இந்த படம் இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஹைதெராபாத்-ல் பெரிய செட் அமைத்து நடக்கவுள்ள அப்பட ஷூட்டிங்கிற்கு தளபதி விஜய் சென்றுள்ளார்.