உலகளவில் தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து வரும் திரைப்படம் கே.ஜி.எப் 2.
இப்படத்தை இயக்கிவர் பிரபல கன்னட இயக்குனர் பிரஷாந்த் நீல். இவர் இயக்கத்தில் தற்போது சலார் எனும் படம் உருவாகி வருகிறது.
கே.ஜி.எப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி என்பவர் நடித்திருந்தார். இவருக்கு இப்படம் இந்தியளவில் புகழை தேடித்தந்துள்ளது.
இந்நிலையில், தன்னை இந்தியளவில் பிரபலப்படுத்திய இயக்குனர் பிரஷாந்த் நீல் குறித்து நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கையை மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த் " என்று கூறியுள்ளார்.