எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும், அவருக்கு உதவியதாக கூறப்படு;ம் பெண் காவலர் ஒருவரையும் அமெரிக்க பொலீஸார் தேடி வருகின்றனர்.
கைதி கேசி வைட் மற்றும் திருத்த அதிகாரி விக்கி வைட் ஆகியோர் அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள அலுவலகம் ஒன்றில் இறுதியாக பிரசன்னமாகியிருந்தனர்.
பெண் அதிகாரியான விக்கி வைட், கைதியான கேசி வைட்டை மனநல மதிப்பீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்,
எனினும் அது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் பின்னர் கண்டுபிடித்தனர்
எனவே குற்றம் சுமத்தப்பட்டவரை, குறித்த பெண் அதிகாரி, தப்பிக்க உதவியதாக இப்போது பொலிஸார் நம்புகின்றனர்
இதனையடுத்து அவரை கைது செய்ய பிடியாணையை பிறப்பித்துள்ளனர்.
பொருந்தக்கூடிய வைட் என்ற குடும்பப்பெயர்கள் இருந்தபோதிலும், இந்த இருவரும் சொந்தக்காரர்கள் அல்ல என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்
பெண் அதிகாரியான வைட் சுமார் 25 ஆண்டுகளாக இந்த துறையில் பணியாற்றி வருகிறார்.
அவர் திருத்தங்களின் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்
கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல அவள் எடுத்த முடிவு கொள்கையை மீறியது.
ஏனெனில் இதுபோன்ற கடுமையான குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை பொதுவாக இரண்டு பேரே நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வார்கள் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தப்பிச் செல்வதற்கு முன்பு கேசி வைட்டுடன் பெண் அதிகாரிக்கு தொடர்பு இருந்ததா என்பதைத் தீர்மானிக்க, அதிகாரிகள் இப்போது காணொளிக் காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.
38 வயதான கேசி வைட், 2020, செப்டம்பர் இல் 58 வயதான கோனி ரிட்ஜ்வே என்பரை கத்தியால் குத்திய கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்