தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொரட்டாலா சிவா. இவர் இயக்கத்தில் சமீபத்தில் ஆச்சார்யா படம் வெளிவந்தது.
இதனை தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இயக்குனர் கொரட்டாலா சிவா இப்படத்தை பற்றி சமீபத்தில் கூறும்போது, " என்னுடைய அடுத்த படத்தில் என்.டி.ஆர்.நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக முதலில் ஆலியா பட் நடிப்பதாக இருந்தது.
ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஆலியா படத்தில் இருந்து விலகிக்விட்டார். இப்போது ராஷ்மிகாவும், பூஜா ஹெக்டேவும் நடிக்க போட்டி போடுகிறார்கள். காரணம் இது Pan - India படமாக வர இருக்கிறது. அதிகபட்சம் ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது " என அவர் கூறியுள்ளார்.