புடினின் ரகசிய காதலி என்று அறியப்படும் அலினா கபேவாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது காதலிகள் என்று நான்கு பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு குறைந்தபட்சம் 4 காதலிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 38 வயதாகும் அலினா கபேவா, கடந்த வாரம் மாஸ்கோவில் உள்ள VTB அரங்கில் நடந்த அலினா 2022 விளையாட்டு திருவிழாவின் ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் அவரது வலதுகை விரலில் புதிதாக மோதிரம் அணிந்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதைத்தொடர்ந்து, புடினுக்கும் அவருக்கும் இடையில் இருக்கும் இரகசிய உறவு உறுதியாகியுள்ளதாக வதந்திகள் வெளியாகின.
அதுமட்டுமின்றி, இருவரது உறவை வேலும் உறுதி செய்யும் விதமாக அலினாவுக்கு 2015 மற்றும் 2019-ல் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவரே தற்போது தகவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த இரண்டு விடயங்களும் கிட்டத்தட்ட புடினின் உறவை உறுதி செய்வதாக காட்டுகின்றன. ஆனால் இதற்கிடையில் மேலும் 3 பெண்களை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதிபர் விளாடிமிர் புடின் வெளிப்படையாக தனது மனைவி என ஒப்புக்கொள்ளப்பட்ட பெண் லியுட்மிலா ஷ்க்ரெப்னேவா. அதேபோல், இருவரும் விவாகரத்து செய்தியையும் பகிரங்கமாக வெளியிட்டார். இருவரும் தற்போது Saint Petersburg என்று அழைக்கப்படும் Leningrad நகரத்தில் பழக்கமானார்கள்.
புடின் KGB உளவாளியாக இருந்தபோது லியுட்மிலா ஷ்க்ரெப்னேவாவை ரகசியமாக 1983-ல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பின்னர் 2014-ல் இருவரும் பிரிந்தனர். 2015-ல் லியுட்மிலா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர் புடினின் முன்னாள் மனைவி என்றாலும், ரஷ்யாவின் முதல் பெண்மணி என்று புடினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரே பெண் அவர் தான என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்களின்படி, ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பு, புடினின் வீட்டில் சுத்தம் செய்பவராக பணியாற்றிய பெண் தான் ஸ்வெட்லானா கிரிவோனோகிக். அப்போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
அவருக்கு Luiza Rozova என்ற 19 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு புடின் தான் தந்தை என கூறப்படுகிறது.
Saint Petersburg நகரத்தைச் சேர்ந்த ஸ்வெட்லானா கிரிவோனோகிக், தற்போது 74 மில்லியன் யூரோ மதிப்புடனான சொத்துக்கள் கொண்ட நாட்டின் பணக்கார பெண்களில் ஒருவராகவும், ஒரு பெரிய ரஷ்ய வங்கியின் பகுதி உரிமையாளராக உள்ளார்.
2003-ல் மிஸ் ரஷ்யா பட்டத்தை வென்றவர் விக்டோரியா லோபிரேவா. அவர் ஒரு காலத்தில் புடினின் காதலியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மிஸ் ரஷ்யா போட்டியின் இயக்குநராக இருக்கும் விக்டோரியா, 2018-ல் FIFA உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ தூதராக இருந்தார்.
லோபிரேவா இப்போது இகோர் புலரோவ் என்ற ரஷ்யருடன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மிட்பீல்டர் ஹென்ரிக் மிகிதாரியனுடன் டேட்டிங் செய்வதாகவும் வதந்தி பரவியது.