எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை நடிகர்கள் மற்றும் துணை நடிகைகள் பங்களிப்பு மிகவும் அபாரமானது. லீடு ரோலில் நடிப்பவர்களையும் அவர்கள் சில நேரங்களில் நடிப்பால் ஓவர்டேக் செய்துவிடுவதுண்டு.
அப்படிப்பட்ட சில நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே சரண்யா பொன்வண்ணம் முகம் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை அம்மா கேரக்டரில் கவர்ந்திருக்கிறார்.
வேலையில்லா பட்டதாரி, கோலமாவு கோகிலா தொடங்கி எதற்கும் துணிந்தவன் வரை அவர் அம்மா ரோலில் நடித்த படங்களை பட்டியலிட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஒருகாலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர், அதன் பின் போகப்போக குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியவர் அவர்.
காமெடி கலந்த குணச்சித்திர வேடங்களில் அவர் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
பாகுபலி படத்தில் ராஜமாதா ரோலில் செம கம்பீரமாக நடித்த பிறகு ரம்யா கிருஷ்ணன் பெரிய கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கோலிவுட்டின் முக்கிய குணச்சித்திர நடிகைகளில் அவரும் ஒருவர்.
ராதிகாவும் தற்போது அம்மா ரோல்களில் கோலிவுட்டில் ரசிகர்களை அசத்தி வருகிறார். ஒரு காலத்தில் முக்கிய ஹீரோயினாக தமிழசினிமாவில் இருந்த அவர் தற்போது அம்மா ரோல்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.
நானும் ரௌடி தான், தெறி, தங்கமகன் என அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து இருக்கிறார். தற்போது அதிகம் படங்கள் நடித்து வருகிறார் அவர்.
ஒல்லி பெல்லி ஹீரோயினாக பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர் சிம்ரன். அதுவும் விஜய் - சிம்ரன் ஜோடி எவெர்க்ரீன் ஒன்று. தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வரும் சிம்ரன்.. சில படங்களை வில்லியாகவும் நடித்து இருக்கிறார்.
சீமராஜா படத்தில் அவரது நடிப்பை பார்த்து அவரா இது என எல்லோரையும் நடிப்பில் வியக்க வைத்தார் அவர். அதன் பின் பேட்ட, மஹான் ஆகிய படங்களிலும் அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.