More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக கடும் வருத்தத்தில் ரணில்
கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக கடும் வருத்தத்தில் ரணில்
May 02
கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக கடும் வருத்தத்தில் ரணில்

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் செயற்படும் விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். 



இவ்வாறான இக்கட்டான நிலையிலும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏப்ரல் மாதத்தை வீணடித்துள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார். 



 



அனைத்துக் கட்சிகளின் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே மேசையில் ஒன்று கூடி இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவது முக்கியமாகும்.



ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் மிகவும் நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகியிருந்தன. எனினும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் துரதிஷ்டவசமாக இழந்துவிட்டோம்.



 



இந்த நெருக்கடி மேலும் தீவிரமடைந்த பின்னர் ஆட்சியை பிடிப்பது எளிதாகிவிடும் என்று யாராவது நினைத்தால், அது அப்படி இருக்காது. ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு இதை யாராலும் செய்ய முடியாது. எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது.



கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஏனைய அரசியல்வாதிகள் குழுவொன்றுடன் கலந்துரையாடிய போது ரணில் இதனைத் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங

Feb02

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரிய

Mar14

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப

Aug31

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப

Apr04

இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து, இந்திய மற்றும

Aug13

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்

Aug17

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர

Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய

Mar19

மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை

Mar27


நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ

Feb06

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீள அமைக்கப்படவுள்ள ம

Apr20

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த

Jul24

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல

Jun10

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப

Sep23

நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ