தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லையாக இருப்பவர் நடிகை சித்ரா. சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி பின் சின்னத்திரை நடிகையாக வலம் வந்து படங்கள் நடிக்கும் நாயகியாக வளர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்தவரே சித்ரா தான் என்று கூறலாம். அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் சித்ராவின் நடிப்பிற்காகவே ரசிக்க ஆரம்பித்தார்கள்.
அவர் இன்னும் சினிமாவில் பல சாதனைகளை செய்து பெரிய அளவில் வளர்ந்து இருப்பார் என்று பார்த்தால் அது சில வருடங்களுக்கு முன்பு அப்படியே முடிந்துவிட்டது.
சித்ரா மரணத்தில் மர்மம்
தனது கணவருடன் நசரத் பேட்டை ஹோட்டலில் தங்கியிருந்த அவர் திடீரென தூக்குபபோட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது அவரது மரணத்திற்கு காரணம் எம்.ஏ. என்றும் அவர்களால் தற்போது தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் புதிய புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.