More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களை முட்டாள்கள் என அசிங்கப்படுத்தும் வீரவன்ச
கோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களை முட்டாள்கள் என அசிங்கப்படுத்தும் வீரவன்ச
May 02
கோட்டாகம ஆர்ப்பாட்டக்காரர்களை முட்டாள்கள் என அசிங்கப்படுத்தும் வீரவன்ச

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அசிங்கப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டுள்ளார்.



அதன்படி, தற்போதைய நிலையில் யாரும் பிரபலம் அடைய விரும்பினால் கோட்டாகம சென்றால் சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.



நேற்று இடம்பெற்ற மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று வீதியில் இருப்பவர்களில் அதிகமானோர் மத்திய வர்க்கத்தினர் தான். இன்று அவர்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல், சவால் ஏற்பட்டுள்ளது.





நெருக்கடிக்கு மத்தியில் ஆர்ப்பாட்டங்களில் வீரனாகுவது பெரிய விடயமல்ல. எந்த ஒரு கோமாளியும் காலி முகத்திடலுக்கு சென்றால் ஹீரோவாகுவது பெரிய விடயமல்ல.



நான் அண்மையில் பார்த்தேன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தேசிய கொடியுடன் பொலிஸ் சீருடையில் சென்று வீரக் கதைகள் பேசிக்கொண்டிருந்தார். அவர் யார் என தேடி பார்த்தால் 5 கிலோகிராம் கஞ்சாவுடன் சிக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர். ஒழுக்காற்று விசாரணைகளுக்குள்ளானவர். அவர் அங்கு சென்றதால் வீரனாகிவிட்டார்.





இன்னும் சிலரும் உள்ளனர். பெயர்களை குறிப்பிட்டால் மனமுடைய வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு அயோக்கியனும் காலி முகத்திடலுக்கு சென்றால் அவர் வீரன். இவ்வாறு நெருக்கடியில் வீரனாகுவது வீரன் அல்ல அந்த நெருக்கடியை தீர்ப்பதே வீரருடைய செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec12

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ

Jan27

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ

May15

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த

Sep22

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம

Feb02

இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த

Mar23

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக

Sep13

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற

Apr27

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது

May01

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்

Jan01

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ

Mar20

நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த

Oct15

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ

May13

அதாள பதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத

Sep03

மட்டக்களப்பு வவுணதீவு காவற்துறை பிரிவிலுள்ள பாவக்கொ

Jul18

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த