சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பேரணிகள் நடத்தப்படும் பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை இன்றையதினம் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.00 மணி தொடக்கம் உரிமம் பெற்ற மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பாதைகள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் இடங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், வீதியோரம் அமைந்துள்ள மதுபானசாலைகள் மற்றும் சந்திப்பு இடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.