More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்
பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்
May 01
பொருளாதார நெருக்கடி - இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடும் மக்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



விசேடமாக கடல் வழியாக இவ்வாறு தப்பி செல்வது இலகுவாக இடம்பெறுவதனால் பல கடல் எல்லைகளில் கடற்படையினர் நீண்ட காலமாக பாதுகாப்பினை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.





இலங்கை விமானப்படையும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமானப்படை பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.



நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



அண்மைக் காலத்தில் வட மாகாணத்தை சேர்ந்த சுமார் 200 பேர் இவ்வாறு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் செல்ல முயன்ற பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.



இவ்வாறு தப்பிச் செல்ல பல்வேறு மீன்பிடி படகுகளை சிலர் பயன்படுத்தியுள்ளதாகவும் இதன் காரணமாக குறித்த படகுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர்  விசேட தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த

Oct18

பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ

Jun12

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயி

Nov04

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவள

Jul08

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பத

Mar02

இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக

Mar09

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்

May26

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பா

Aug28

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ

Sep20

மக்கள் எதிர்கொண்டுள்ள பட்டினிப் பிரச்சினையைத் தீர்ப

Oct15

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர

Sep26

சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக

Jan28

 

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர

Jan27

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அ

Jun10

வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப