பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா.
நகைச்சுவை கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ,முதல் முறையாக சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படுதோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், சீமராஜா திரைப்படம் படுதோல்வியடைந்திருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி ஷேர் வந்துள்ளதாம்.
இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.