விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆனது, அதுவும் இப்படத்தில் நடித்துள்ள சமந்தா பிறந்தநாள் அன்று வெளியானது.
பட ரிலீஸின் போது ஒருபக்கம் சமந்தா பிறந்தநாள் கொண்டாட, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இப்போது படத்திற்கும் நல்ல விமர்சனங்கள் வர வசூலிலும் எந்த குறையுமே இல்லை.
தமிழக வசூல்
சென்னையில் முதல் நாளில் படம் ரூ. 66 லட்சம் வசூலிக்க, தமிழகத்தில் ரூ. 5 கோடி வரை வசூலித்தது. தற்போது இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் படம் மொத்தமாக ரூ. 8 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாம்.
வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.