அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை ஆளுநருக்கான இறைமை வாய்ந்த அதிகாரம், மன்னிப்பு வழங்குவதற்கு, தண்டனை குறைப்பு வழங்குவதற்கு, அல்லது தண்டனை கழிவு கொடுத்து விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலை மற்றும் வழக்கு தொடர்பிலும் அவர் தெளிவாக விபரிக்கின்றார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,