விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இதில் சீசன் 5 மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்ஷன்.
இதன்பின் KPY சாம்பியன்ஸ், KPY 6,7 ஆகிய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், ஜோடி Fun ஆல்டிமேட் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் பங்கேற்றார்.

சின்னத்திரையில் வலம் வந்த ரக்ஷன், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகராக அறிமுகம் ஆனார்.
மேலும், தற்போது தொடர்ந்து மூன்று சீசன்களாக குக் வித் கோமாளியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த விஜய் டெலிவிஷன் விருது விழாவில் கூட, சிறந்த தொகுப்பாளர் என்று விருதையும் பெற்றார்.
இந்நிலையில், தொகுப்பாளர் ரக்ஷன், ஒரு நாள் நிகழ்ச்சியை வழங்க ரூ. 1 வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.