கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில் சாதனைகள் படைத்து வருகிறது. ஏற்கனவே இந்த படம் 1000 கோடி வசூலை கடந்துவிட்டது.
இந்நிலையில் யாஷ் பான் மசாலா விளம்பரத்தில் நடிக்க மறுத்து பல கோடி ருபாய் டீலை வேண்டாம் என நிராகரித்து இருக்கிறார். அதை ஏஜென்சி உறுதி செய்து இருக்கிறது. அதுவும் அது Double digit டீல் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.
மக்களின் உடல்நிலை முக்கியம் என கூறி யாஷ் பல கோடி ருபாய் டீலை நிராகரித்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கேஜிஎப் 2 வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில் ஹிந்தி vs கன்னடம் பிரச்சனை வெடித்து இருக்கிறது. ஹிந்தி தேசிய மொழி இல்லை என நடிகர் சுதீப் கூற, ஹிந்தி தான் தேசிய மொழி என நடிகர் அஜய் தேவ்கன் கூறினார். இதனால் இணையத்தில் இரண்டு மொழி ரசிகர்கள் மத்தியில் வார்த்தை போர் நடந்து வருகிறது.
அஜய் தேவ்கன் பான் மசாலா விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதை குறிப்பிட்டு பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். யாஷ் எத்தனை கோடி கொடுத்தாலும் அதில் நடிக்க மறுத்ததற்கு பாராட்டும் குவிகிறது.