நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவை இணையத்தில் வைரல் ஆகவும் செய்கின்றன.
விவாகரத்துக்கு பின் தற்போது அவர் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார், அதற்காகவே அதிகம் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சமந்தா ஏணியில் கால் வைக்காமல் கைகளை மட்டும் கொண்டு ஏறி செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெறித்தனமாக ஒர்கவுட் இது என நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.