நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என்றே பாதி மக்களுக்கு தெரியாது, ஆனால் இப்போது அப்படி இல்லை.
தமிழ் சினிமாவின் முக்கிய அதாவது பிரபலமான சீரியல் நடிகை என்றாலே முதலில் இவர் முகம் மக்களுக்கு நியாபகம் வந்துவிடும், அந்த அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.
ராஜா ராணிக்கு பின்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் நடித்த இவருக்கு அதன்பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. அதில் நடித்த சஞ்சீவ் என்ற நடிகரையே காதலித்து திருமணம் செய்து இப்போது 2 குழந்தைகளை பெற்றுவிட்டார்.
கடந்த மார்ச் 27ம் தேதி தங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என சஞ்சீவ் புகைப்படத்துடன் அறிவித்தார்.
குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆல்யா இப்போது தான் நடித்துவந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து சுத்தமாக வெளியேறிவிட்டார்.