பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூமில் பாலாஜி முருகதாஸ் மற்றும் அபிராமி நடந்தது குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் அங்கு என்ன நடந்தது என்பதை உண்மையை போட்டு அபிராமி உடைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜியும் அபிராமியும் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. மேலும் ஸ்மோக்கிங் ரூமில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டதாகவும் சிலர் வதந்திகளைப் பரப்பினர் .
இந்த நிலையில் அபிராமி தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது, ‘ஸ்மோக்கிங் ரூமில் உண்மையில் அப்படி என்னதான் நடந்தது? என்று ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு அபிராமி, ‘அங்கே ஒன்றுமே நடக்கவில்லை, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் நானும் சமூக வலைதளங்களில் சில விஷயங்களை பார்த்தேன். எப்படித்தான் இப்படி கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை .
லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு ஷோவில் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் யாராவது அப்படி நடந்து கொண்டு கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் புகை பிடிப்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும் அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என்றும் பிக்பாஸ் வீட்டில் டென்ஷன் அதிகமாக இருக்கும்போது புகை பிடித்தால்தான் ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால் அதே நேரத்தில் ஆண் போட்டியாளர்கள் புகைபிடிப்பதை ஏன் யாருமே கேள்வி கேட்கவில்லை என்றும் அவர் ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.