More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறை வெற்றி!
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறை வெற்றி!
Apr 25
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறை வெற்றி!

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.



இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.



இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார்.



இந்நிலையில், இரண்டாவது முறை அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மேக்ரான், வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.



மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட  பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ

May04

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் ப

Mar31

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி

Apr08

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த

Mar23

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து

Jul03