More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கோல்மால் பட நடிகை மஞ்சு சிங் மாரடைப்பால் மரணம்!...
கோல்மால் பட நடிகை மஞ்சு சிங் மாரடைப்பால் மரணம்!...
Apr 20
கோல்மால் பட நடிகை மஞ்சு சிங் மாரடைப்பால் மரணம்!...

கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்சி  தயாரிப்பாளர்மான மஞ்சு சிங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.



இந்தியில் வெளியான ‘கோல்மால்’ உள்ளிட்ட  பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சுசிங். பின்னர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய அவர் பல்வேறு பிரபலமான டிவி ஷோக்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் மும்பையில் வசித்து வந்த  74 வயதான மஞ்சு சிங், மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இரங்கல்  தெரிவித்துள்ள பாடலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான ஸ்வானந்த் கிர்கிரே, இரங்கல் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் மஞ்சு சிங் தன்னை டெல்லியில் இருந்து மும்பை அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்ததாகவும், அவர் தற்போது இல்லை என்றும்  குறிப்பிட்டுள்ளார்.



ஸ்வராஜ்’, ‘ஏக் கஹானி’, ‘ஷோ டைம்’ போன்ற பல்வேறு அற்புதமான நிகழ்ச்சிகளை தயாரித்து இந்திய தொலைக்காட்சித்  துறையின் முன்னோடியாக திகழ்ந்தவர் மஞ்சு சிங் என்று குறிப்பிட்டிருக்கிறார்.   சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரித்து வந்த மஞ்சு சிங், தன் படைப்புகளை உலக அரங்குகள் வரை கொண்டு சென்றவர். ஆம், உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரைப்பட விழாக்களிலும் மஞ்சு சிங் பங்கேற்ற அவர், தனது படைப்புகளை  சர்வதேச  அரங்கில்  அங்கீகாரம் பெறச்செய்திருக்கிறார்.



 கடந்த 2015ம் ஆண்டு  பள்ளி பாடத் திட்டத்திற்காக பெரும் பங்காற்றிய அவருக்கு அங்கீகாரம்  அளிக்கும் வகையில்  மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மும்பையில் மஞ்சு சிங், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட் பிரபலங்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   அவரது திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul05

ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே

Jul15

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்

Jun07

முன்னணி நடிகை பூஜா ஹெக்டே

இந்திய அளவில் முன்னணி

May03

வில்லனாக அவர் நடிக்க மாட்டார்  

இயக்குனர் விக்

May03

கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா

Feb21

வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க

Oct13

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப

Feb02

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ

Feb20

சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம

Feb14

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்கு

Jan23

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு

Mar09

ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட

Mar21

தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப

May25

தீபாவளியில் வெளியாகும் கார்த்தியின் திரைப்படம் 

May11

திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன