More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்!
கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்!
Apr 19
கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் ரஷிய படைகள் தீவிரம்!

மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய  தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு குழந்தை உட்பட மேலும் 11 பேர்காயமடைந்து உள்ளதாகவும் லிவிவ் நகர மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார். ரஷியா நான்கு ஏவுகளை தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் மூன்று உக்ரைன் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை தாக்கியது என்றும், லிவிவ் பிராந்திய பகுதி ஆளுநர் மாக்சியம் கோஸ்ய்ட்ஸ்கேய் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதலுக்காக ரஷியா ராணுவம் பீரங்கிகள் உள்பட தனது பிற திறன்களை அதிகரித்து வருவதாக  அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஷிய போர் பிரிவுகளின் எண்ணிக்கை கடந்த வாரம் 65ல் இருந்து 76 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 



உக்ரைன் மீது ரஷியா கண்மூடித்தனமாக மற்றும் சட்ட விரோதமாக தாக்குதல் நடத்தி வருவதற்கு ஐரோப்பிய யூனியன் அமைப்பின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் மனித உரிமை மீறல்களை உறுதி செய்வதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பணிகளையும் பிற முயற்சிகளையும் ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஆதரிக்கிறது என்றும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்



கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ரஷியா முழு வீச்சில் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டான்பாஸ் பகுதியில் ரஷிய படைகள் போரை தொடங்கி உள்ளன, அதற்காக அவர்கள் நீண்டகாலமாக தயாராகி இருந்தனர் எனறும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு ரஷிய ராணுவத்தின் பெரும் பகுதி அந்த பகுதியில் குவிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப, போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான சூழல் இன்னும் முழுமையாக வரவில்லை என ஐநா சபை மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.  உயர்மட்ட உக்ரைன் மற்றும் ரஷிய அதிகாரிகளை சந்தித்த பின் பேசிய அவர்,  ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



 மூன்று நாள் சண்டைக்குப் பிறகு லுகான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிரெமின்னா நகரை ரஷியப் படைகள் கைப்பற்றியதாக அந்த நகரத் தலைவர் கூறி உள்ளார்.



 ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து வலுவாக போரிடுவதற்கு போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள உக்ரைன் அரசு, இதற்காக ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. “தயவு செய்து எனக்கு ஒரு போர் விமானம் வாங்கிக் கொடுங்கள்” என்று பிரசார இணையதளத்தில் தலைப்பிடப்பட்டுள்ளது. 



உக்ரைன் ராணுவம், ரஷிய ஆதரவு அரசியல்வாதியான விக்டர் மெட்வெத்சக்கை  2 நாட்களுக்கு முன்னர் கைது செய்தது. இந்நிலையில் தற்போது அவரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் ரஷ்ய படைகள் தற்போது முற்றுகையிட்டிருக்கும் மரியுபோல் நகரில் உள்ள தனது படைகளையும், பொதுமக்களையும் விடுவிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவம் கோரிக்கை வைத்துள்ளது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா

Jul06

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மாநில முதல் மந்தி

Feb27

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,

Aug21

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Feb25

 ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர

Jun09

நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்

May25

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நட

Mar05

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித

May31

உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய து

Jan20

தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ

Feb02

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன

Jan18

ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Mar24

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே

Feb25

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட