அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரிஸ்டா ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், இனிகோ இருதயராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, தில்லைநகரில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.