More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் 2 மத்திய மந்திரிகள் பயணம்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் 2 மத்திய மந்திரிகள் பயணம்!
Apr 13
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் 2 மத்திய மந்திரிகள் பயணம்!

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோர்னியர்’ இலகுரக விமானம் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது 17 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய விமானம் ஆகும்.



பொதுத்துறை விமான நிறுவனமான அல்லயன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் நேற்று முதல் முறையாக தனது வர்த்தக போக்குவரத்தை தொடங்கியது. அசாம் மாநிலம் திருப்ருகரில் இருந்து அந்த விமானம் புறப்பட்டது.



மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் பிரபலங்கள் அதில் பயணம் செய்தனர். அருணாசலபிரதேச மாநிலம் பாசிகாட் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. சிறிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்கும் பிரதமரின் ‘உடான்’ திட்டத்தால் இது சாத்தியமானதாக 2 மத்திய மந்திரிகளும் தெரிவித்தனர்.



இதன் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானத்தை பயணிகள் போக்குவரத்துக்கு இயக்கிய முதலாவது விமான நிறுவனம் என்ற பெருமையை அல்லயன்ஸ் ஏர் பெற்றுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந

Dec31

டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம்

Jan01

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை

Jun14

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள

May26

முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ

Jul19