More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஆந்திர அமைச்சராக நடிகை ரோஜா இன்று பதவியேற்பு!
ஆந்திர அமைச்சராக நடிகை ரோஜா இன்று பதவியேற்பு!
Apr 11
ஆந்திர அமைச்சராக நடிகை ரோஜா இன்று பதவியேற்பு!

ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில்  இன்று நடிகை ரோஜா அம்மாநில அமைச்சராக பதவி ஏற்கிறார்.



ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார். கொரோனா  காரணமாக அமைச்சரவை மாற்றத்தில் சற்று தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 அமைச்சர்கள் தற்போது ராஜினாமா செய்த நிலையில் புதிதாக அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.



அந்த வகையில் புதிய அமைச்சர்கள் பட்டியலில் நகரி தொகுதி எம்எல்ஏவும்,  நடிகையுமான ரோஜா இடம் பெற்றுள்ளார்.   இன்று காலை 11 மணி அளவில் ரோஜா உட்பட 24 அமைச்சர்கள் அமராவதிக்கு அருகில் உள்ள வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று பதவியேற்கின்றனர்.



ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தவுடன் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்பார்த்த பொறுப்பு வழங்கப்படவில்லை.  இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர்.  தற்போது அவருக்கு எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை பொறுப்பு கிடைத்துள்ளது.  இதன் மூலம் நடிகை ரோஜா ஆந்திரா அமைச்சராக இன்று பதவி ஏற்கிறார். அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த ரோஜா பின்னர் சட்டமன்ற உறுப்பினராக பதவி உயர்வு பெற்று ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு தலைவராக பணியாற்றி வந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக உள்ள இவர்  தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

Aug16

சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத

Oct19

கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி

Jan31

பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப

Sep18

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர

Mar20

சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப

Jun12

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு

Mar03

பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்

Mar08

ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப

Jan12

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத

Jul30

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்

Aug10