More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • எல்லா விஷயங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது.. ஜே.பி. நட்டா
எல்லா விஷயங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது.. ஜே.பி. நட்டா
Apr 10
எல்லா விஷயங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது.. ஜே.பி. நட்டா

தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவகாரங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.



இமாச்சல பிரதேசம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் சொந்த மாநிலம். இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை பா.ஜ.க. இப்போதே தொடங்கி விட்டது. பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி. நட்டா 4 நாள் பயணமாக நேற்று இமாச்சல பிரதேசம் சென்றார். முதல் நாளான நேற்று  பொதுக்கூட்டம், சாலை பேரணியில் ஜே.பி. நட்டா பங்கேற்றார்.



சிம்லாவில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா  பேசுகையில் கூறியதாவது: அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் நாங்கள் (பா.ஜ.க.) நான் மாநிலங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்தோம். இப்போது இது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தின் முறை. ஹமிர்பூர் மற்றும் சம்பாவில் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஆனால் நாங்கள் அதை செய்தோம்.



பல கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டன. இது எளிதான வேலை அல்ல. பல்வேறு சமூக சேவை முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டதன் மூலம் அரசியல் கலாச்சாரத்தை  பிரதமர் மோடி மாற்றியமைத்தார். ரூ.185 கோடி செலவில் இரட்டை டோஸ் தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல்கள் அல்லது போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து 23 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது என எல்லா விவகாரங்களிலும் மோடி அரசு உறுதியுடன் செயல்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct01

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ

Aug13

வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்

Jun10

     தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித

Aug04

மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ

Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Feb15

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத

Apr26

இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற

Jul30

கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்

Jul30

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு

Mar27

1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Aug24

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Apr02

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி

Jul07

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த

Nov21

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர