More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன் - கோட்டாபய ராஜபக்ச
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன் - கோட்டாபய ராஜபக்ச
Apr 08
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன் - கோட்டாபய ராஜபக்ச

நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்.”



– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.



‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் நாட்டில் ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது:-



“2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், எனக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டுச் சக்திகளால் களமிறக்கப்பட்ட சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரைத் தோற்கடித்து 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆணையுடன் நான் ஆட்சிப்பீடம் ஏறினேன்.



தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதிப் பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்.



நாடாளுமன்றத்திலும் எனக்கு எதிராக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை கொண்டுவருவதற்குரிய பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.



அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் பொங்குகின்றனர்.



‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷத்துடன் எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் அரசியலே உண்டு என்பதை நாடாளுமன்றத்தில் இந்த வாரம் எதிரணியினர் நடத்திய போராட்டங்களும் பகிரங்கப்படுத்தியுள்ளன.



எனவே, நாட்டில் எனக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் உண்மையில் மக்கள் போராட்டங்கள் அல்ல” – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா

Mar08

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம

Mar10

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு

Jun11

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை

Feb15

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள

May04

எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ

Mar14

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி

Jul18

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள

Jan28

கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி

Apr15

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ

Mar08

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ

Sep29

கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ

Jan11

மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி

Feb12

இலங்கையில் வாக

Sep21

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற